அவுஸ்திரேலியாவின் அண்மித்த மொரெடோன் தீவின் குவின்ஸ்லாந்து கடற்கரைப் பகுதியில் படகொன்றில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் ஆபத்திற்கு இலக்கான சிறுமி ஹெலிக்கொப்டரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் குறித்த கடற்பகுதியில் படகில் பயணித்துக் கொண்டிருந்த 15 வயதான சிறுமியின் தலைமுடி படகின் செலுத்தியில் (புரொப்பல்லெர்) சிக்கிக் கொண்டதில், சிறுமியின் செவிப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதனை அடுத்து குறித்த சிறுமி படகிலிருந்து நீரில் வீழ்ந்து மூழ்க ஆரம்பித்ததாகவும், சம்வம் தொடர்பில் அறியக் கிடைத்ததும் அப்பிராந்தியக் கடலோரக் காவல் படையினர் ஹெலிக்கொப்டரின் உதவியுடன் சிறுமியை பாதுகாப்பாக மீட்டு, சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரிபலமான விடுமுறை சுற்றுலாத் தலமாக விளங்கும் மொரெடோன் தீவானது, குயின்ஸ்லாந்து தலைநகரின் வடகிழக்கில் இருந்து 58 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.