நான்கு பேருக்கு அதிக எண்ணிக்கையானோரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்லும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
முச்சக்கரவண்டிகளில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் சந்தர்ப்பங்களிலேயே அது கட்டுப்பாட்டை இழப்பதாக, வீதிப் பாதுகாப்பு மற்றும் வாகனப் போக்குவரத்து தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிரி சேனாரத்ன தெரிவித்துள்ளார்
இவ்வாறு அதிக எண்ணிக்கையான பயணிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியொன்று நேற்று பண்டாரகமயில் விபத்துக்குள்ளானதில் 4 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்தனர்
கடந்த வருடத்தில்முச்சக்கரவண்டி விபத்துக்களில் 207 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களுள் 23 பேர் ஐந்து வயதுக்கு குறைவானவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.