கண்டி நகரின் வாகன நெரிசலைக் குறைப்பதற்கு மற்றுமொரு பரீட்சார்த்த நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன்படி, இன்று மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் இரு பாதைகளின் போக்குவரத்து ஒழுங்குகளை ஒரு வழிப்பாதையாக்க போக்குவரத்துப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வில்லியம் கோபல்லாவ மாவத்தை ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள புத்தர் சிலையின் முன்னால் இருந்து கெட்டம்பே வரை உள்ள பாதையில் வாகன போக்குவரத்து கெட்டம்பே வரையில் மாத்திரம் பயணிக்கும்.
கெட்டம்பே தியகபநாராம அருகிலுள்ள சுற்றுவட்டம் முதல் கண்டி மணிக்கூட்டுக் கோபுரம் வரையுள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை வழியான வாகனப் போக்குவரத்துக்கள் நகர் பக்கமாக மாத்திரமே இடம்பெறும்.
கடந்த பெப்ருவரி 16 ஆம் திகதி அறிமுகம் செய்த வாகனப் போக்குவரத்துப் பரீட்சார்த்த திட்டமும் கண்டி நகருக்குள் இன்னும் செயற்படுத்தப்படுவதாகவும் கண்டி பொலிஸார் அறிவித்துள்ளனர்.